Thursday, November 11, 2010

படித்ததில் பிடித்தது - விகடனின் இலவச தளம்


 ஆனந்த விகடனை இலவசமாக வலையில் படிக்கலாம் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை அது நேராக சந்தா செலுத்தும் இடம் நோக்கியே செல்கிறது இது இனி உதவாது என்றெண்ணி கொண்டிருந்தபோது இந்த முகவரி கிடைத்தது. அதில் கல்வி - தகவல், வேலைவாய்ப்பு, வழிகாட்டி ,, கதை கட்டுரை, கவிதை படைப்புகள் நம் போன்ற பதிவர்களின் பதிப்புத்தொகுப்பும் தனியே இடம் பெற்றுள்ளது அதில் கிட்டத்தட்ட எல்லா துறையையும் நம் போன்றவர்கள் அலசியுள்ளார்கள். ஆனாலும் இன்றும் பலர் வலையில் பார்த்து தனக்குப்பிடித்ததை தன் இடுகைகளில்  வெட்டியொட்டும் பழக்கதைக்கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமே வேதனைக்குரியது . ஆகவே நம் இடுகையில் அப்படியொரு அபத்தம் நிகழ்வதில்லை எதை எங்கே பார்த்தோமோ அங்கு நம் வாசகரையும் அழைத்துச்செல்வதே நம் பழக்கம்

 இடுகைகளின் தொகுப்பு 
 புகைப்படக்கழஞ்சியம்
ஆக்கங்களின் தொகுப்பு புகைப்படம், குறும்படம், கலைகள்  

Sunday, November 07, 2010

பார்த்ததில் பிடித்தது - தமிழ் பற்றிய ஒரு ஆரோக்யமான அலசல்

ன்று சின்னத்திரை என்பது கருத்துகளை அனைவரிடத்திலும் சுலபமாக கொண்டு சேர்க்க உதவும் ஒரு நல்ல ஊடகம், அதில் தமிழ் சார்ந்த தமிழ் சம்பந்தப்பட்டவைகள் எவ்வளவு என்று பார்த்தோமேயானால் அது சற்று குறைவே எனலாம், ௨௪ மணி நேரமும் நாடகங்களும், திரைப்படங்களுமே பெரும்பாலான இடத்தைப்பெருகின்றன. ஒரு சில மட்டுமே தமிழுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதாகத்தெரிகிறது அவற்றுள் சில பொதிகை , மக்கள் , விஜய் என இப்பட்டியல் நீளும் ,

இங்கு குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப்பார்ப்போம்

விஜயின் நீயா நானா - தமிழ் பற்றிய ஒரு விவாதம்

நிகழ்ச்சியின் சாரம் இங்கு சொடுக்கிப்பெற்றுக்கொள்ளவும்

இந்நிகழ்ச்சிக்காக பாராட்டு/நன்றி பெறுகிறவர்கள்

திரு.ஜெகத் காஸ்பர் ராஜ் - நம்முடைய இந்த கேடுகெட்டத்தனங்களையும் தாண்டி தமிழ் ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செழித்திருக்கிறது

திரு. சி. கோபிநாத் - எப்போதும்போல் சிறப்பான ஆரோக்யமான ஒரு விவாதத்தை நம் முன் கொடுத்ததற்காக

திரு. அழகேசன் பாண்டியன் - நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றியவர்